இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் மாத்திரம் 229,298 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் மாதத்தில் 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.
குறித்த காலப் பகுதியில் 53,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா (India) 39,212 சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அதே நேரத்தில் ரஷ்யா (Russia) மார்ச் மாதத்தில் 29,177 சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாம் இடத்தில் இருப்பதுடன், ஐக்கிய இராச்சியம் (UK), ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்தும் கணிசமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கைக்கு 722,276 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அத்துடன் இலங்கை இந்த ஆண்டு நாடு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.