ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் குமாரகந்த பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள ஆடையகம் ஒன்றிற்கு அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிமெல்லகமஹ பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கோனபீனுவல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 3 ஆம் திகதி இரவு, ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரகந்த பகுதியில் உள்ள வீதிக்கு அருகில் உள்ள ஆடையகம் அருகே நின்று கொண்டிருந்த பெண் உட்பட இருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இருவரும் படுகாயமடைந்து கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆண் நபர் உயிரிழந்தார்.