மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலாஓயா பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களேயான பெண் குழந்தை நேற்றையதினம் (7) திடீரென உயிரிழந்ததாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்று மாலை தயிரும் தேன் வளையமும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற அந்தப் பெண் குழந்தை எழுந்திருக்கவில்லை.
இதனையடுத்து குழந்தை பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையின் சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரி லக்மாலி. அத்திமலையின் பதில் பொலிஸ் மா அதிபர் எல்.ஏ. ஜினதாச விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.