கொட்டுகச்சிய வயல்களில் வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த சிறிய யானைக் குட்டியை கிராம மக்கள் பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் இன்று (09) காலை ஒப்படைத்தனர்.
இவ்வாடி பிடிக்கப்பட்ட யானைக் குட்டி சுமார் 3 மாத வயதுடையது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர், குட்டி யானையை நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவிடம் ஒப்படைக்க வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நாட்களில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள காடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் யானைக் கூட்டத்தில் இருந்து மேற்படி யானைக் குட்டி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.