முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (9) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உடையார் கட்டு குரவில் பகுதியினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இந்தநிலையில், காயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.