பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்ததால், பெண் வழக்கறிஞர் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளார்.
பெண் வழக்கறிஞர் உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறப்படும் சந்தேக நபர்களுக்காக அவர் ஆஜராவதால், மற்ற தரப்பினரிடமிருந்து அச்சுறுத்தல்கள் வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக புதுக்கடை நீதிமன்றத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சார்பில் உள்ள வழக்குகளில் ஆஜராவதற்காக , வேறு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிப்பு விடுத்த நேரமே, அதற்கு தாங்கள் ஆஜராகுவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்கள் வந்தமை தொடர்பாக முறைப்பாடு வந்துள்ளதாக , கடவத்தை பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.