தங்காலை – குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து Freezer லொறியொன்றில் போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கிரிந்திவெல மற்றும் வத்தேக பிரதேசங்களைச் சேர்ந்த 34 மற்றும் 35 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடுவெல பிரதேசத்தில் இருந்து மீன்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் Freezer லொறியின் ஊடாக சந்தேகநபர்கள் சென்றுள்ளதோடு, குடாவெல்ல பகுதியில் போதைப்பொருட்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் திரும்பி வந்துக்கொண்டிருந்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.