குரு பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மே மாதத்திலேயே ராகு பெயர்ச்சியும் நடக்க உள்ளது. இந்த இரு பெயர்ச்சிகளும் பிற கிரக மாற்றங்களும் ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த தமிழ் புத்தாண்டின் கிரகப்பெயர்ச்சியின் தாக்கத்தால் எந்த ராசிகளுக்கு நன்மைகள் நடக்கும்? எந்த ராசிகள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்?
விசுவாவசு புத்தாண்டில் 12 ராசிகளுக்குமான பலன் எவ்வாறு அமைய போகின்றது என நாம் இங்கு பார்போம்.
மேஷம்
விசுவாவசு தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு பல வித வெற்றிகளை அள்ளித் தரும். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் தடைகள் அனைத்தும் நீங்கி நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் நிறைவடையும். திருமணத்திற்காக காத்திருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு பலவித நல்ல செய்திகளை கொண்டு வர உள்ளது. வணிகத்தில் அபரிவிதமான லாபம் உண்டாகும். பொருளாதார நிலை வலுவடையும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்
விசுவாவசு தமிழ் புத்தாண்டு தொடங்கிய உடனேயே நிகழவுள்ள குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். சுய தொழில் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள்.
கடகம்
விசுவாவசு தமிழ் புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். செலவுகள் மீது கட்டுப்பாடு இருப்பது அவசியம். ஆண்டின் இரண்டாவது பகுதியில் பணியிடத்தில் வளர்ச்சியை காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
சிம்மம்
விசுவாவசு ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன்களை அளிக்கும். இந்த ஆண்டில் அதிக லாபம் உண்டாகும். வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளவர்கள் இந்த ஆண்டு அந்த நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.