இலங்கை கடவுச்சீட்டு சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
டுபாயை தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான நோமட் கேபிடலிஸ்ட் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைக்கமைய, இலங்கை கடவுச்சீட்டு முன்னேற்றம் கண்டுள்ளது.
அந்த அறிக்கைக்கமைய, இலங்கை 171வது இடத்திலிருந்து 3 இடங்கள் முன்னேறி 168வது இடத்திற்கு வந்துள்ளது.
கடவுச்சீட்டு
199 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு அயர்லாந்து உலகிலேயே மிகவும் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டாக பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் கிரீஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.