முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உதய கம்மன்பில முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உதய கம்மன்பில பிள்ளையானின் வழக்கறிஞராக செயல்படுகிற காரணத்தினால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குறித்த குற்றச்சாட்டின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.