இந்தியாவிலிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், 25, 48 மற்றும் 50 வயதுடைய கொழும்பு, வெல்லம்பிட்டிய மற்றும் மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 5.248 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் குறித்த போதைப்பொருட்களை தாய்லாந்தில் கொள்வனவு செய்து இந்தியாவின் பெங்களூருக்கு எடுத்து சென்றதன் பின்னர், சனிக்கிழமை (19) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள், அவர்கள் கொண்டு வந்த போதைப்பொருள் தொகையுடன், சனிக்கிழமை (19) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















