உடல் ஆரோக்கியத்தில் தண்ணீர் மிகவும் அவசியம் என்றாலும் அளவிற்கு அதிகமாக பருகினால் சிறுநீரகத்திற்கு தீங்கு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
தண்ணீர்
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு தண்ணீர் போதுமான அளவு கட்டாயம் குடிக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்தால் மட்டுமே செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
அதுமட்டுமின்றி சருமம் வறட்சி அடையாமலும், பளபளப்பாகவும் இருக்கும். உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு வந்துவிட்டால், கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தண்ணீர் பற்றாக்குறை பல கடுமையான நோய்களுக்கு வழிவகுப்பதோடு, உடல் உள் உறுப்புகளை சேதப்படுத்துவது மட்டுமின்றி, வயிறு மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனையும் ஏற்படும்.
நமது உடம்பில் முக்கியமான உறுப்பாக காணப்படும் சிறுநீரகம், உடலில் சேரும் கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவுவதாகும். மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையையும் செய்கின்றது.
சிறுநீரகம் சரியாக செயல்பட போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இல்லை என்றால், நீரிழப்பு, சிறுநீரகக் கற்கள், சிறுநீர்க பாதை தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக தண்ணீரு் பருகுவது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துமாம். குறிப்பாக சிறுநீரக ஆரோக்கியத்தில் கடுமையான பக்க விளைவை ஏற்படுத்துகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானத்தின் மூலம் உடலுக்குள் நுழையும் பொருட்கள் ரத்தத்தின் வழியாக சிறுநீரகங்களை அடைகின்றது.
சிறுநீரகங்கள் உடலில் சேரும் அதிகப்படியான நீரை வடிகட்டி, சிறுநீர் வடிவில் வெளியேற்றி, சிறுநீரகத்தின் திரவ சமநிலையை சீராகவும் வைக்கின்றது.
சிறுநீரகமும் அதன் திறனுக்கு ஏற்ப இரத்தத்தை வடிகட்டுகிறது. சிறுநீரகத்தில் அதிக அழுத்தம் இருந்தால், சிறுநீரகத்தின் திறன் பாதிக்கப்படலாம். இது சிறுநீரக நோயை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.




















