வத்தளை – எவரிவத்தை பிரதேசத்தில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றின் சக்கரம் கழன்று விழுந்ததால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



















