இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வாவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று (15) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன்படி, சந்தேக நபரை தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
பின்னர், இந்த வழக்கு விசாரணைகளை ஜூன் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டார்.



















