சுமார் ஒரு கோடியே 86 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குக் கடத்திவந்த விமான பயணிகள் 7 பேர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, அநுராதபுரம், கெக்கிராவ மற்றும் கஹவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் குவைத், டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து இன்று காலை நாட்டை வந்தடைந்தவர்கள் என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.