இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்காக பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட யூத வழிபாட்டு மையங்கள் மீது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து யூத வழிபாட்டு மையங்களுக்கும் 24 மணிநேர பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்கு தனிப்பட்ட ரீதியில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



















