சுவிஸ்லாந்திலிருந்து வந்த நபர் ஒருவர் மனைவியின் அக்காவினுடைய மகளுடன் மாயமாகியுள்ளதாக குறித்த சிறுமியின் தாய் தகவல் வழங்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுவிஸாந்து நபருக்கு 40 வயதும் அந்த நபருடன் சென்ற சிநுமிக்கி 16 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியிலுள்ள நபர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமாண நிலையில் மனைவின் நகைகளை வைத்துக்கொண்டு சுவிஸ்லாந்திற்கு சென்றுள்ளார்.
அவர் அங்கு சென்று பணத்தை உழைத்து மனைவிக்கு அனுப்பாமல் பல பெண்களுடன் தொடர்ப்பு கொண்டு அவர்களுக்காக செலவு செய்து வந்துள்ளார்.
இதை அறிந்த மனைவி தன் கணவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சுவிஸிலிருந்து மீண்டும் கலவாஞ்சிக்குடி வந்த நபர் மனைவியுடன் பேசுவதை நிறுத்தி விட்டு உறவு முறையான அக்காவின் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளார்.
அப்போது அங்கு இருந்த அக்காவின் மகளுடன் காதல் உறவை வளர்த்து அந்த சிறுமியை அழைத்து சென்றுள்ளதாக அந்த சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.



















