தமிழகத்தின் நாகப்பட்டின கோடியக்கரை அருகே, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட படகு கரையொதுங்கியுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சோழா கலங்கரை விளக்கம் அருகே இந்த ஆளில்லாத படகு நேற்று மீட்கப்பட்டுள்ளது.
19 அடி நீளம் கொண்ட, நீலம் மற்றும் மஞ்சள் நிறமான இந்த படகு, யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தப் படகு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக எவரையாவது தரையிறங்குவதற்காகவோ அல்லது வேதாரண்யம் பகுதியில் போதைவஸ்துக் கடத்தலுக்காகவோ பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தமிழக பொலிஸ் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.