இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட ஏழு நாடுகள், அந்தந்த நாடுகளின் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய, இலங்கைக்கு மருந்துகளை விநியோகிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில், நான்கு நாடுகளுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள், இதுவரையில் 113 மருந்துகளின் பட்டியலை சமர்ப்பித்துள்ளன.
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கமைய இந்த மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன



















