பொதுவாக மழைக்காலத்தில் காலநிலை மாற்றங்களால் சில உடல்நலப் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
அதிலும் குறிப்பாக எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் சளி, இருமல், மலேரியா, டைபாய்டு, டெங்கு மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் வரலாம்.
மற்ற காலநிலையை விட, மழைக்காலத்தில் உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
இந்த காலகட்டத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக, பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் விரைவாகப் பரவுகிறது. இதனால் செரிமான பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் பால் மஞ்சள் பாலில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி டீ
இஞ்சி டீயில் வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மழைக்காலங்களில் குடிக்கலாம்.
எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் என்பதால் மழைக்காலங்களில் குடிக்கலாம். இது உங்கள் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
துளசி கஷாயம்
மழை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துளசி கஷாயம் செய்து குடிக்கலாம். இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அலர்ஜிய எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கச் செய்யும்.
சூப்
மழை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சிக்கன் சூப் செய்து குடிக்கலாம். இது பல ஊட்டச்சத்துக்களை உடலுக்கு கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.




















