தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை தொடங்குவோம் என்று ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஜூலை 22ஆம் திகதி போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக இன்று நியாயமான பதில் கிடைக்கவில்லை எனில், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தை ஆரம்பிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் கே.யு.கொந்தசிங்க தெரிவித்தார்.
குறிப்பாக ரயில் சாரதிகள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பாக, ஒரு தீர்க்கமான தீர்வு காணப்படாவிட்டால் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



















