நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் மாலைதீவு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை நாடு திரும்பினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக விற்பனைக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் ஓஷத மகா ஆராச்சி நாமல் ராஜபக்க்ஷவுக்கு பிடியாணை (28) பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும், நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் ஆஜராகத் தவறியதால், நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் குழு ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஒரு மனுவை இன்று (29) காலை சமர்ப்பித்ததாக கூறப்படுகின்றது




















