பாடசாலை மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க நேற்று (31) உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் அளித்த முறைப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் அளித்த அறிக்கைகளை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
ஆபாசப் படங்களுக்கு அடிமையானதாகக் கூறப்படும் சந்தேகநபர், தனது மனைவியுடன் உடலுறவில் இருந்த தருணங்களை இரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், குடும்ப தகராறில் மனைவியிடம் கல்வி கற்கும் மாணவிக்கு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.



















