ரக்வானை, மெதகங்கொட பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடவலவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் இருந்து சுமார் 3 கிலோ கிராம் கோர்டைட், 9 கிலோ கிராமுக்கு மேற்பட்ட அம்மோனியா, 15 வோட்டர் ஜெல் என்ற வெடி மருந்து, 28 டெட்டனேட்டர்கள் மற்றும் 22 அடி நீளமான நூல் ஆகியவை மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர் ரக்வானை பகுதியை சேர்ந்த 78 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது



















