இலங்கை முழுவதும் அனைத்து மருத்துவமனைகளுக்கு தரமற்ற தடுப்பூசிகளை விநியோகித்ததாகக் கூறப்படும் சந்தேகநபரின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருந்து நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான சுதத் ஜனக பெர்னாண்டோ தாக்கல் செய்த பிணை மனுவையே, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி இந்திரிகா கலிங்கவன்ச நிராகரித்துள்ளார்.
இந்த வழக்கு ஏற்கனவே மேல் நீதிமன்ற ட்ரயல் அட் பார் அமர்வில் விசாரிக்கப்படுவதால், பிணை மனுவை தமது நீதிமன்றால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



















