பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளம்பர படப்பிடிப்பிற்காக நடிகை தமன்னா இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடிகை தமன்னா நடிக்கும் விளம்பர படப்பிடிப்புக்கள் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளன.
இந்தியா திரும்புவதற்கு முன் பல நாட்கள் நடிகை தமன்னா இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இன்னிசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்கனவே நடிகை தமன்னா யாழ்ப்பானத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




















