இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கதவடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த போதும், யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரம் வழக்கம் போல இயங்கி வருகிறது.
மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை வழமைபொன்று முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்று பகல்வரை கதவடைப்பை மேற்கொள்ளுமாறு தமிழரசு கட்சி கோரியிருந்த்து. எனினும் இலங்கை அரசங்கம் உட்பட ப தரப்புக்குள்ள கதவடைப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில் பல இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன.



















