ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற நிலநடுக்கத்தின் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்து குஷ் பிராந்தியத்தில் உள்ள மசார்-இ-ஷெரீஃப் நகருக்கு அருகிலுள்ள கோல்மில் 28 கிமீ (17 மைல்) ஆழத்தில், அந்நாட்டு நேரப்படி அதிகாலை 12:59 மணிக்கு (20:29 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் வரை இரவு வரை தெரிவித்தது.
தலைநகர் காபூலை தளமாகக் கொண்ட AFP செய்தி நிறுவனத்தின் நிருபர்களால் இது உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலனிப்டி, வடக்கு ஆப்கானிஸ்தானில் 28 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், குல்மிலிருந்து மேற்கு-தென்மேற்கே 22 கிமீ தொலைவில், மசார்-இ-ஷெரிப் நகருக்கு அருகில் மையப்பகுதி அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (03) அதிகாலை 12:59 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும் ஆப்கானிஸ்தானில் காபூல், ஈரானில் மஷாத் மற்றும் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பிற்பகுதியில் இப்பகுதியில் 4.9 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் இந்த நிலநடுகுகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சொத்து அல்லது உயிர் சேதம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை!
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி, ஹிந்து குஷ் பகுதியில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன் அதிர்வுகள் ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லையான பாகிஸ்தானிலும் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜலாலாபாத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கே 42 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.
தாலிபான் அரசாங்கத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ எட்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.
ஆப்கானிஸ்தான் நில அதிர்வு மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது,
இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்து குஷ் மலைத்தொடர் யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ளது.
இதனால் நிலநடுக்கங்கள் மிகவும் பொதுவானதாகவும் ஆபத்தானதாகவும் உள்ளன.




















