கொழும்பில் மீண்டும் குடியேறப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலையை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பும் எண்ணம் தனக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச
எனினும், தேவைகளுக்கு ஏற்ப கொழும்புக்குச் செல்ல வேண்டியிருக்கலாம் என்று மகிந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுகேகொட பகுதியில் உள்ள ஒரு தனியார் இல்லத்தில் மகிந்த ராஜபக்ச வசித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரான வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்திருந்தார்.
கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பை எளிதாக்குவதற்கும், தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கும் கொழும்பிற்கு அருகில் இருப்பதன் வசதி என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல் செயற்பாட்டில் இருந்து விலகியிருந்த மகிந்த மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மகிந்தவின் திடீர் அறிவிப்பு அரசியல்வாதிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















