பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளார்.
மஹர சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்த அவர் குறித்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோ ஆகியோரை சந்தித்து நாமல் நலன் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
டக்ளஸ் கைது
டக்ளஸை சந்தித்தபின் சிறையில் இருந்து வெளியே வந்த நாமல், அரசாங்கம் அரசியல் ரீதியாக திவாலாகி வரும் அதே வேளையில் அரசியல் அடக்குமுறையையும் செயல்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, பாதாள உலகக் குழு உறுப்பினர் வசம் சென்ற விவகாரம் தொடர்பிலேயே டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



















