அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணங்களுக்கு அமைய இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை சுயதொழிலாளர்களின் முச்சக்கர வண்டி சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இதுவரை முதலாவது கிலோ மீற்றருக்கு அறவிட்ட 60 ரூபா கட்டணத்தை 50 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. இரண்டாவது கிலோமீற்றர் முதல் அனைத்து கிலோ மீற்றர்களுக்காக 40 ரூபா அறவிடப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணங்களுக்கமைய முச்சக்கர வண்டிகளின் மேலதிக உதிரிப்பாகங்கள் குறைவடைந்துள்ளதாகவும் அதற்கமைய அதன் நன்மையை பொது மக்களுக்கு வழங்குவதற்கு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
பயணிகளின் நன்மைக்காக சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. அந்த அனைத்து முச்சக்கர வண்டிகளும் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.