கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐந்து கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டே மாற்றுக் கூட்டணி உருவாக்கப்பட்டு வருவதாக, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களுக்கான சுய நிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரப்பகிர்வு, அரசியல் கைதிகள் மற்றும் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாத தடை சட்டம் கைவிடப்படுதல் போன்ற 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற 3 கட்சிகளுடன், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகிய 2 கட்சிகளும் இணைந்து, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமுக குழுவினருடன் இணைந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஒன்றிணையக்கூடிய கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.