ஹொரன பேருந்து சாலையில் இன்று இடம்பெற்ற தென்னங் கன்றுகள் நாட்டும் நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக
அதிகரித்துச் செல்லும் அரிசி விலையை எதிர்வரும் வாரத்தில் குறைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதியும் பிரதமரும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.