2020 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் நிலையில், இந்தப் புத்தாண்டியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக கட்சித்தகவல்கள் தெரியவிக்கின்றன.
அவரின் இந்த நடவடிக்கைகளினால், தன்னுடைய தலைமைத்துவப் பதவியை 2025 வரையிலும் தக்கவைத்து கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சஜித் பிரேமதாஸவுக்கு பலமுறை அழைப்பு விடுத்திருந்த போதிலும், எந்தவொரு சந்திப்பிலும் சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், கரு ஜயசூரியவை கட்சிக்கு தற்காலிக தலைவராகி, அடுத்த தேர்தலுக்காக நகர்வை முன்னெடுக்க ரணில் தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதேவேளை , சஜித் பிரேமதாஸவுக்கு தலைமைத்துவப் பதவியை வழங்கவில்லை என்றால், சஜித் தலைமையில் புதிய கூட்டணியை அமைத்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட தீர்மானித்துள்ளதாக சஜித் அணியினர் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.