அரச நிறுவனங்களில் உயர்மட்ட அதிகாரிகளால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களும் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் அரச நிறுவனங்களின் தீர்மானங்கள் தொடர்பில் உயர் அதிகாரிகள் போன்று சாதாரண அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயம் அறிவிக்க என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளிடம் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி உட்பட அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகள் அறிந்திருந்த போதிலும் சாதாரண அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அறியாமல் உள்ளனர்.
அரச சேவையை அதிகரித்து, ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் தொடர்பில் உயர் அதிகாரிகள் போன்று சாதாரண ஊழியர்களும் சரியான விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆட்சியின் கீழ் திறமையான மற்றும் மனிதாபிமான அரச சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்களுக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.