தனியார் தொலைக்காட்சியில் போட்டி ஒன்றில் வென்ற சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி அண்மையில் லண்டனுக்கு சென்று புகைப்படங்களை முகப்புத்தக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.
அதனை பார்த்த ரசிகர் ஒருவர் இப்படி பயணங்களுக்கு செலவழிப்பதற்கு பதிலாக ஈழத்து ஏழைகளுக்கு உதவி செய்யலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு செந்தில் கணேஷ் பதில் வழங்கியுள்ளார்.
அதாவது,
இது வரை எங்களுக்கு கிடைத்த வருமானத்தில் பலருக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.
சமீபத்தில் கூட 50 ஆயிரம் ரூபாவை ஈழத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து உள்ளோம். அது மட்டும் இல்லாமல் எங்களுக்கு இது போன்ற செய்திகளை பதிவிட விருப்பம் கிடையாது. எங்களினால் முடிந்த உவியை நாங்கள் செய்து வருவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த ஈழத்து ரசிகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியை பாராட்டி வருகின்றனர். இவர்கள் தற்போது சினிமாவில் பின்னணி பாடகர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் செந்தில் கணேஷ் அவர்கள் ‘கரிகாலன்’ என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.