இலங்கையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே விதமான கவனஈர்ப்பு ( ஹோர்ன்) ஒலியெழுப்பல் ஒழுங்குகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் ஒலியெழுப்பும் சம்பவங்கள் குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கென ஒரு குழுவை அமைத்து நடைமுறைகள் பற்றி ஆராயுமாறு அமைச்சர் மஹிந்த சமரவீர பணித்துள்ளார்.
இதேவேளை, பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் அதிகமான சத்தங்ளுடன் கூடிய பாடல்கள் ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
சத்தம் குறைவாக பாடல்களை இசைக்காத தனியார் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், தற்போது, சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே விதமான கவனஈர்ப்பு ( ஹோர்ன்) ஒலியெழுப்பல் ஒழுங்குகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.