படபொல நிந்தான பகுதியில் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் அங்கு வைத்து கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மது போதையில் இருந்த ஒருவரினால் சிகையலங்காரம் செய்து கொள்வதற்காக வருகைதந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த இளைஞன் பலபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு குறித்த இளைஞன் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இளைஞனின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதில விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.