குவைட் நாட்டிற்கு தொழில் வாய்ப்பு பெற்று சென்ற 21 இலங்கையர்கள் இன்று அதிகாலை மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.
குவைட் நாட்டிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச்சென்று அங்கு தொழில் தருணர்களால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட நிலையில் இவர்கள் இலங்கைக்கு திரும்பி வந்துள்ளனர்.
இது தொடர்பில் இவர்கள் குவைட் நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு முறைப்பாடு செய்தவர்களே மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குவைட் தூதுவராலயம் ஆகியன இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.