சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென அறுபத்து ஒன்பது லட்சம் மக்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து வைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களித்த அறுபத்து ஒன்பது லட்சம் வாக்காளர்களின் விருப்பின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் தேசிய சுதந்திர தின நிகழ்வின் போது சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.