பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முற்று முழுதாக ரத்து செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் அமைச்சரவையில் இது குறித்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு உத்தேச சட்டமானது ஊடகங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் ஒன்றியங்கள், மாணவர்கள் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஒடுக்கும் வகையிலானது என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி 78ம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்படும் என்பதுடன் நாட்டின் அனைத்து மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.