திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்தவர் சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான மார்க்கண்டு மேவிநாதன் என சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குடும்பஸ்தர் வயலுக்குச் சென்றுவிட்டு வீடு நோக்கிச் செல்லும் போது அவரை யானை தாக்கியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நபர் கூக்கிரலிட்டு சத்தமிட அயலவர்கள் அவரை மீட்டு மூதூர் தளவைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.