ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டமைக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பல உறுப்பினர்களே இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் கணக்குகளில் பதிவு ஒன்றை வெளியிட்டு அவர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
அந்த பதிவுகளில், “ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்வதற்கு முதலிடம் வழங்குவதற்கு பதிலாக, பாரிய ஊழல் மோசடிகளுக்கு தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
ரஞ்சனை கைது செய்த செயற்பாடானது பொலிஸாரால் அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும்” என மஹிந்த ஆதரவு தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டினை சோதனையிட்ட பொலிஸார் அவரை நேற்று கைது செய்தனர்.