நாட்டில் வாழும் அனைத்து இன மக்கள் மற்றும் மதங்களின் சுதந்திரத்தை சிங்கள பௌத்த மக்களே உறுதிப்படுத்துகின்றனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்களவர்கள் முட்டாள்கள் என்று கூறிய யுகம் நவம்பர் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டது.
பௌத்த சங்க சபையினர் இதற்கு தலைமையேற்றதை நான் புதிதாக கூறவேண்டியதில்லை. பௌத்த சங்க சபையினரின் வரலாற்று சிறப்புமிக்க பொறுப்பு உச்சளவில் நிறைவேற்றப்பட்டது என்பதை மட்டும் நான் கூறவேண்டும்.
பௌத்த சாசனம், சிங்கள இனம், நாட்டின் ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாப்பது உட்பட அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணையப்பட்டவை. சிங்கள பௌத்தர்கள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே ஏனைய மதங்களின் சுதந்திரம் நாட்டில் பாதுகாக்கப்படும் என்பது எமது வரலாற்றில் தெளிவாக காணக் கூடிய ஒன்று.
சிங்கள பௌத்த மக்களே நாட்டில் வாழும் ஏனைய இனங்கள் மற்றும் மதங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.