அவுஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயினால் கோடிக்கனக்கான மிருகங்கள் பரிதாபமாக உயிரிழந்த காட்சி நெஞ்சை பதற வைத்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூசவுத் வேவ்ஸ் ஆகிய பகுதிகளிலும் விக்டோரியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது.
சுமார் 4 நாட்களாக காட்டுத் தீ பரவி வரும் நிலையில் இது வரை 18 பேர் பலியாகிவிட்டதாக தெரிகிறது. விக்டோரியாவின் சன்புரி அருகே காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் தான் இந்த கொடூர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதாவது மனிதர்கள் செய்த தவறால் இன்று அப்பாவி விலங்குகளும், வனங்களும் அநியாயமாக அழிந்து கொண்டுள்ளன. அமேசான் காட்டுத் தீயின் கொடூரம் அடங்குவதற்குள்ளாக தற்போது அவுஸ்திரேலிய வனங்கள் பற்றி எரிகின்றன.
இந்தக் காட்டுத் தீயில் சிக்கி 50 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் அழிந்து போய் விட்டன. இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் கோடை காலம் மிகக் கடுமையாக இருந்தது. அதிகரித்த வெப்ப நிலையே இந்த காட்டுத் தீக்கு காரணம். கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியல் வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
இந்த காட்டுத் தீ காரணமாக ஆஸ்திரேலிய வன விலங்குகளின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. கிட்டத்தட்ட 8000 கோலா கரடிகள் அநியாயமாக இந்த காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 48 கோடி பறவைகள், விலங்குகள், பாலூட்டிகள் என மிகப் பெரிய உயிரிழப்பை சந்தித்துள்ளது விலங்குகள் உலகம்.
பல பகுதிகளில் மீட்கப்படும் உயிரினங்கள் மனிதர்களைக் கட்டிப்பிடித்துக் கொள்ளும் காட்சிகள் நெஞ்சைப் பிசைவதாக உள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
ஒரு பெண் தீயில் சிக்கிய கரடியை மீட்டு தண்ணீர் கொடுத்து அதன் உஷ்ணத்தை தணிய வைக்கிறார். அது துடிக்கும், வலியால் அரற்றும் காட்சி மனதை அழுத்துகிறது.
தீயிலிருந்து மீட்கப்பட்ட கரடிகள், கங்காருகள்.. நாம் செய்த தவறுகளுக்கு இந்த அப்பாவி விலங்கினங்கள் பலியாவதற்கு என்ன ஆறுதல் கூறி அவற்றைத் தேற்ற முடியும்!
Cutie stay strong okay, cant hold my tears anymore #PrayForAustralia pic.twitter.com/uOga6Ta3V0
— terJINtah (@JeonBaeHwangKim) January 5, 2020
#PrayForAustralia the fire started from sparking electrical transform and killed half a billion animals.Humans are destroying earth and there ready for wwlll pic.twitter.com/93V9HABQsB
— Supreeth (@Supreet62612534) January 5, 2020
God, please safe themHeartbreaking to see these innocent creatures suffer #PrayForAustralia pic.twitter.com/BaljMyeykA
— Tacak (@NatasyaClaudia6) January 5, 2020
My heart goes out for these innocent creatures
How much scared they all r lookingIt’s really heartbreaking to watch them suffering like this
God pls protect them all #PrayForAustralia pic.twitter.com/rD8iV0oBZO
— Ras Malai (@Myself_Natz) January 5, 2020