நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
மூத்தவர் மற்றும் சிரேஷ்டத்துவத்தை கவனத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கிய பின்னர் தனது ஆசனத்தை மாற்றி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.