அண்மையில் புதிதாக பதவியேற்றார் கிழக்குமாகாண அன்றைய தினம் அரசியலுக்கு அப்பால் எல்லோரும் மரியாதை நிமித்தம் கலந்து கொண்டார்கள் ஆனால் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை .
அது போக கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்திட்கு வந்த போதும் எவரும் வரவேற்க வரவில்லை இருப்பினும் அரச ஆளுநரை புறக்கணிப்பது.
இது கோட்டபாயவை எதிர்ப்பதற்காக கூட்டமைப்பின் கொள்கையாக இருக்க கூடும் என பலருக்கும் நினைக்க தோன்றியது.
ஆனால் வடக்கின் ஆளுனரை வரவேற்பதில் முண்டி அடித்துக்கொண்டு முன்வரிசையில் இருந்து வரவேற்றனர்.
இதில் இருந்து என்ன புரிகின்றது வடக்கு ஆதிக்க கூட்டமைப்பு கிழக்கை ஓரங்கட்டி அரசியல் , அபிவிருத்தி அனாதைகளாக்கி அதிலே அரசியல் செய்ய முயற்சிக்கிறது என்பதுடன் வடக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நேரடித் தொடர்போ மறைமுக தொடர்போ வைப்பதில் தவறில்லை ஆனால் கிழக்கு சார்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேரடித் தொடர்பை வைக்கக் கூடாது எதிர் நிலை அரசியலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அந்த நிலைப்பாடு.
இது தெரியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு பிரதிநிதிகள் இருப்பது கவலைக்குரியது என கூறும் அரசியல் அவதானிகள் இப்படியான விடயத்தில் கட்சி அடிப்படை முடிவுளை எடுக்காமல் கூட்டுப் பெறுப்பு இல்லாமல் போகுமாக இருந்தால் கிழக்கு மாகாண தமிழ் தேசியக் கூட்டமைப்பில் விலாசம் இல்லாது முளைவிட்டுள்ள 2009இன் பின் வயதுக்கு வந்த போராட்டம் தொரியாதவர்களா கடசியை துாக்கி சுமந்து அழிப்பது என அடி மட்ட தொண்டர்கள் ஆதங்கப் படுகின்றனர்.
இந்த விடயத்தை கிழக்கில் உள்ள ஆளுமை உள்ள தமிழ் மக்கள் சுதாகரித்து கொள்ளவில்லை என்றால் கடவுளும் உங்களை காப்பாற்ற மாட்டார்.
கிழக்கின் அழிவிற்கு கிழக்கு வாழ் மக்களாகிய நீங்களே நாள் குறித்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளதை உணராமல் உள்ளமை மிக வேதனையான சம்பவம் என கூறும் அரசியல் அவதானிகள் இந்த பலவீனங்களை பயன்படுத்தி ஆயுதக் குழுக்கள் ஊடுருவுவதை யாரும் அவதானிக்காமல் இருப்பது மிக வேதனையான சம்பவம் என கூறப்படுகிறது.