ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது அரசியல் கடன்களை செலுத்தியுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான குற்றச்சாட்டு தீர்மானத்தின் போது ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய முக்கிய பங்கை ஒருபோதும் தாம் மறக்கவில்லை என்றும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
அதற்கமைய தான் எந்த தினத்திலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னால் சென்று கத்தியால் குத்துகின்ற பாணியில் அரசியல் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.