இந்தியாவின் கேரள மாநிலத்தில் மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில், இளைஞருடனான பிரச்னைகளை 8 மாதங்களுக்கு முன்னர் பேசி முடித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மாணவி அஷிகாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏபரல் மாதம் வெள்ளறட பொலிசாரின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
அஷிகாவுக்கு அனு என்பவர் தொடர்ந்து தொல்லை தருவதாக கூறியே தந்தை புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் முன்னிலையில், இனி அஷிகா தொடர்பில் தமது தலையீடு இருக்காது என அனு உறுதி அளித்திருந்தார்.
ஆனால் இதன் பின்னரும் அஷிகாவும் அனுவுக்கும் இடையே உறவு தொடர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காரக்கோணம் பகுதியை சேர்ந்த 19 வயதான அஷிகா அரசு கல்லூரி ஒன்றில் பியூட்டிஷன் கோர்ஸ் படித்து வந்துள்ளார்.
அதே பகுதியில் அனு ஆட்டோ சாரதியாக உள்ளார். திங்களன்று பகல் சுமார் 11.30 மணியளவில் நண்பர் ஒருவரின் பைக்கில் அனு அஷிகாவின் குடியிருப்புக்கு சென்று இந்த படுகொலையை செய்துள்ளார்.