முன்னாள் மாநில அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கசிந்த ஆடியோ கிளிப் ஒன்று இன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தா அலுத்கமகேவை ‘சுட்டுக் கொல்வது’ குறித்து ராமநாயக்கவுக்கும் ரணிலுக்கும் இடையிலான உரையாடலாக அது காணப்படுகிறது.
ரஞ்சன்ராமநாயக்க வீட்டில் இருந்து காவல்துறையினர் கைப்பற்றிய குறுந்தகடுகள் மற்றும் டிவிடிகளில் காணப்பட்டதாக கூறப்படும் பல தொலைபேசி பதிவுகளிலேயே இந்த ஆடியோ வெளிவந்திருக்கிறது.
செய்தி அறிக்கையின்படி, ஆடியோ கிளிப் தொடர்பாக அமைச்சர் அலுத்கமகே சிஐடியிடம் புகார் அளிப்பார் என்று கூறப்படுகிறது.